தமிழக அரசு விவசாயிகளுக்கு கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் கடன் உதவி!
1 lakh loan assistance to Tamil Nadu farmers to buy dairy cows
தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒரு பகுதியாக, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களுக்காக கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் கடன் உதவி வழங்கப்படுகிறது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
கடன் தொகை: ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்க ரூ.1,20,000, ஒவ்வொரு மாட்டிற்கும் ரூ.60,000 வழங்கப்படும்.
திருப்பிச் செலுத்தும் காலம்: 3 ஆண்டு காலம்
வட்டி வீதம்: 7% ஆண்டு வட்டி
பயனாளியின் பங்கு: 5%
யார் விண்ணப்பிக்கலாம்? (தகுதிகள்)
பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர்
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
வயது: 18-60
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய உறுப்பினராக இருக்க வேண்டும்
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் இந்த உதவித் திட்டம் கிடைக்கும்
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்
வங்கி கோரும் அடமான ஆவணங்கள்
விண்ணப்பிக்க வேண்டிய இடங்கள்:
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்)
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
கூட்டுறவு கடன் சங்கங்கள் / வங்கிகள்
இந்த கடன் உதவியைப் பயன்படுத்தி, பால் உற்பத்தியில் ஆர்வமுள்ள விவசாயிகள் பால் பண்ணை தொடங்கிக் கொள்ளலாம்.
English Summary
1 lakh loan assistance to Tamil Nadu farmers to buy dairy cows