அனுமன் ஜெயந்தி விழாவுக்கு தயாராகும் 1 லட்சத்து எட்டு வடைகள்..!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தை அடுத்த கோட்டை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் அனுமன் ஜெயித்திய அன்று சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை கொண்ட மாலை அணிவிப்பது வழக்கம். 

இந்த நிலையில் இந்த ஆண்டு வரும் டிசம்பர் 23ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு அலங்காரம் நடைபெறும். இப்பொழுது அனுமர் சுவாமி சிலைக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் ஆன மாலை சாத்தப்பட உள்ளது. இதற்காக வடை தயாரிக்கும் பணி நேற்று கோயில் வளாகத்தில் உள்ள மண்டபம் பகுதியில் தொடங்கியுள்ளது. இதற்கான பணியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமையிலான 32 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அனுமன் ஜெயந்தி முன்னிட்டு வடை தயாரிக்க 2,025 கிலோ உளுந்து பருப்பு, 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு சீரகம், 125 கிலோ உப்பு பயன்படுத்தப்படுகிறது. உளுந்து மாவு அரைத்து 24 மணி நேரமும் வடை சுடும் பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியானது வரும் டிச.22ம் தேதி காலை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 Lakh Vadas preparing for Hanuman Jayanti at namakkal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->