10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!
10, 11 and 12th public exam guidelines
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதனிடையே 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு முடிவடைந்தது.
இந்த நடப்பாண்டுகாண பொது தேர்வை சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இதில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதியும் தொடங்க உள்ளது.
அதனைத் தொடர்ந்து, மே 5ம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், மே 17ஆம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், மே 19ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,
தேர்வு அறையில் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
காப்பி அடித்தல் மற்றும் விடைத்தாள்களை மாற்றி எழுதுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
பொதுத்தேர்வில் ஆள் மாறட்டும் செய்தால் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும்.
ஒழுங்கின செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகங்கள் முயன்றால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
English Summary
10, 11 and 12th public exam guidelines