கோவையில் ரயில் நிலையத்தில் 10 கிலோ போதை பொருள் பறிமுதல்!
10 kg of drugs seized at railway station in Coimbatore
கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் 10 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து கேரளா மாநிலத்துக்கு செல்லக்கூடிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் கோவை ரயில் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்ட வருகிறது.
இந்தநிலையில், இன்று மதியம் கோவை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலின் போதை பொருள் கடத்தி வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை எடுத்து ரயில் நிலையத்திற்கு சென்று பீகாரில் இருந்து வந்த ரயிலை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
ரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் தடை செய்யப்பட்ட 10 கிலோ போதை பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் தடை செய்யப்பட்ட போதைபொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 வட மாநில வாலிபர்களை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
10 kg of drugs seized at railway station in Coimbatore