சினிமா பட பாணியில் மோசடி! போலி காசோலை மூலம் கோடிக்கணக்கான பணம்! 10 பேர் கைது! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச​ம் : போலி காசோலை மூலம் கோடிக்கணக்கான பண மோசடி செய்த 10 பேருக்கு கொண்ட கும்பலை காவல்துறை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் லோகியாம் கிராமத்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரது வங்கி கணக்கிலிருந்து மர்மநபர்கள் கடந்த மாதம் 15 லட்சம் காசோலை மூலம் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தையும் மோசடி செய்தனர்.

ஆனால் அது தொடர்பாக அந்த வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு எந்த தகவலும் வரவில்லை. வங்கி கணக்கு புத்தகத்தில் பண பரிவர்த்தனை விவரங்களை பதிவு செய்தபோதுதான் அந்த விவரங்கள் தெரிய வந்துள்ளது.

இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது  வங்கி ஊழியர்கள், செல்போன் நிறுவனத்தின் உதவியுடன் போலி காசோலை மூலமாக தங்களது மோசடியை நிறைவேற்றியது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகர் பகுதியில் பதுங்கி இருந்த மோசடி கும்பலை சேர்ந்த 10 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 83 ஆயிரம் ரொக்கப் பணமும், 42 செல்போன்கள், 33 சிம் கார்டுகள் 12 காசோலைகள். 20 வங்கி கணக்கு புத்தகங்கள் சிக்கின.

போலி காசோலை மோசடி நடந்தது குறித்து போலீசார் அதிகாரி ஒருவர் கூறுகையில், காசோலையைக் கேட்டு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளரிடம் விவரங்களை அறியும் வங்கி ஊழியர் மோசடி கும்பலுக்கு அவரது தகவல் தெரிவிப்பார். அந்த நபர் வாடிக்கையாளர்  இறந்து  விட்டதாக கூறி அவரது செல்போன் எண்ணை போலியாக தங்களது பெயருக்கு முதலில் மாற்றிக் கொள்வார்கள்.

அதன் பின்னர் வங்கியில் போலி காசோலை கொடுத்து தங்களது மோசடியை நிறைவேற்றி வந்துள்ளனர். ஆனால் இந்த மோசடி விவரங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரியாது. இவ்வாறு டெல்லி, மத்திய பிரதேசம், அரியானா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் மாநிலங்களில் இந்த கும்பல் தங்களது கைவரிசையை காட்டி உள்ளது என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 people arrested for cheating crores of money through fake checks


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->