100 நாள் வேலை பணியாளர்களின் கவனத்திற்கு... இன்று முதல் அமலுக்கு வந்த செயல்முறை! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் பணியாற்றி வருகின்றனர். 

இந்த வேலை வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் முறைகேடுகளை தவிர்க்கவும் மத்திய அரசு, ஆதார் இணைப்பு அடிப்படையில் சம்பளம் வழங்கும் முறையை கடந்த ஆண்டு அறிவித்தது. 

கடந்த ஆண்டில் வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதி கட்டமாக கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் கால அவகாச நீட்டிப்பு கிடையாது என அறிவிக்கப்பட்டது. 

கடந்த 3 ஆண்டுகளில் ஒரு நாள் மட்டும் வேலை பார்த்து இருந்தாலும் அவர்கள் பணியில் இருக்கும் தொழிலாளர்களாக கருதப்படுவார்கள். 

தற்போது கொண்டுவரப்பட்ட திட்டத்தின் படி பதிவு செய்யப்பட்டிருந்த 25.25 கோடி தொழிலாளர்களின் 14.35 கோடி பேர் மட்டுமே தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அனுப்பி இருந்த சுற்றுகையில் தகுதியான காரணங்களால் பதிவு செய்ய இயலாமல் போனவர்கள் மீண்டும் இணைக்கலாம் என அறிவித்துள்ளது. 

வேலைக்கான அட்டையுடன் ஆதார் எண் இணைத்து விட்டால் வங்கி கணக்குடன் இணைந்து நிதி வழங்கும் துறையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு விரைவாக சம்பளம் பட்டுவாடா செய்ய முடியும். 

மேலும் வேலை செய்யாமல் இருக்கும் ஆட்களின் பெயர்களை எழுதி பணத்தை ஏமாற்றுவதும் தவிர்க்கப்படும். இன்று முதல் பணியாளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து இருப்பதன் அடிப்படையில் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

100 day work salary payment issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->