6 to 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 10000 முதல் பரிசு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


பேரறிஞர் அண்ணா தமிழகத்திற்கு "தமிழ்நாடு" என்று ஜூலை 18ஆம் நாள் பெயர் சூட்டினார். அன்றைய தினமே “தமிழ்நாடு நாளாக” இனி கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்று பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் 2024-2025 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 09.07.2024 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

போட்டிக்கான தலைப்புகள்: 

குமரி தந்தை மார்சல் நேசமணி, தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே முதல் பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.7000/-. மூன்றாம் பரிசு ரூ.5000/- என்ற வகையில் பரிசுத்தொகைகள் வழங்கப்பெற உள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10000 first price announce tamilnadu day competition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->