பதறும் தமிழகம்! டன் கணக்கில் சிக்கிய கெட்டுப்போன இறைச்சி! ரவுண்டு கட்டும் அதிகாரிகள்!
1024 kg expried chicken and muttons sezied 1187 hotels in tamilnadu
பதறும் தமிழகம்! டன் கணக்கில் சிக்கிய கெட்டுப்போன இறைச்சி! ரவுண்டு கட்டும் அதிகாரிகள்!
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷவர்மா சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மீண்டும் நாமக்கல் மாவட்டத்தில் சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்ற கடையில் பர்கர் சாப்பிட்ட 8 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு நடத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அதன் படி, தமிழகம் முழுவதும் 1187 உணவகங்களில் கடந்த 19ம் தேதி உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் 1024.75 கிலோ அளவிலான கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 115 உணவகங்களிடம் இருந்து மொத்தமாக ரூ.1.61 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
1024 kg expried chicken and muttons sezied 1187 hotels in tamilnadu