ரிசல்ட்டுக்கு காத்திருந்த 10ஆம் வகுப்பு மாணவன்.. மின்சாரம் தாக்கி பலியான சோகம்..! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் ரிசல்ட்க்கு காத்திருந்த 10ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகன் முகமது அர்ஷத் (15) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்து வீட்டில் இருந்து வந்த முகமது அர்ஷத், நேற்று நண்பர்களுடன் அதே பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து முகமது அர்ஷத் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் முகமது அர்ஷத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th class boy died due to electrocution in Dindigul


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->