தர்மபுரி : சின்னாறு அணையில் குளித்த 10ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி.!
10th class student drowned chinnaru dam in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் சின்னாறு அணையில் குளித்த போது நீரில் மூழ்கி 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஜில்திம்மனூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் திவாகர்(14) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று திவாகர் நண்பர்களுடன் சேர்ந்து சின்னாறு அணைக்கு குளிக்க சென்றுள்ளார்.
அப்பொழுது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த திவாகர் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் கூச்சல் போட்டுள்ளனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியில் இருந்தவர்கள் திவாகரை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியாததால் இது குறித்து பஞ்சப்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நீரில் மூழ்கி உயிரிழந்த திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
10th class student drowned chinnaru dam in dharmapuri