நாமக்கல் || 11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை.. இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், கீழேரிபட்டி ஜீவா நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த நந்திஷ் என்பவர் மிரட்டி கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கடந்த சில நாட்களக அவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து மகளிடம் கேட்டுள்ளனர். தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் கேட்டுள்ளனர். அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நித்திஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 th Student Raped In Namakkal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->