தமிழ்நாட்டில் 11,538 பேருக்கு டெங்கு பாதிப்பு! இதுவரை 5 நபர்கள் மட்டுமே உயிரிழப்பு! - பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்!
11538 people affected by dengue in Tamil Nadu Only 5 people have died so far Public Health Director Selva Vinayagam
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் ஆங்காங்கே அதிகமாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இந்த டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பின்னர், டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது;-
“தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இப்போது வரை 11,538 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டதுமே மருத்துவமனைக்கு செல்லாமல் பாதிப்பு தீவிரமடைந்த பிறகு மருத்துவமனைக்கு வந்ததால் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் தகவல் தவறானது. ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்ட தகவலை தற்போது புதிதாக பாதிப்பு ஏற்பட்டது போன்ற புரளி பரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 5 நபர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர்”
இவ்வாறு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
English Summary
11538 people affected by dengue in Tamil Nadu Only 5 people have died so far Public Health Director Selva Vinayagam