மக்களே மழைக்காலம் உஷார்! வீட்டின் அருகே 12 அடி மலை பாம்பு! லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்! - Seithipunal
Seithipunal


திருச்சியை அடுத்த உப்பிலியபுரம் பகுதியில் 12 அடி நீளம் கொண்ட மலை பாம்பு தீயணைப்பு வீரர்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்த சமுத்திரம் குடி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் அந்தப் பகுதியில் விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டும்  ஆடு, மாடுகளை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே கட்டப்பட்டுள்ள மாடுகளுக்கு இரவு 10 மணி அளவில் தாழ்வான பகுதியில் கட்டப்பட்டு இருந்த மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக அவர் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் செல்லும் பாதையில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெரில் அங்கு வந்த தீயணைப்பு குழு வீரர்கள்  அந்தப் பகுதியின் தீவிர சோதனையில் ஈடுபட்டு  தாழ்வான பகுதியில் மறைந்திருந்த 12 அடி நீளம் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். 

பின்னர், வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை காட்டுப்பகுதிக்குள் விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உப்பிலியபுரம் பகுதியில் வீட்டின் அருகே 12 அடி நீள மலைபாம்பு பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் வரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 feet long mountain snake was caught by firefighters in Uppiliyapuram area near Trichy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->