நெருங்கும் தேர்தல் - 12 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைப்பு.!
12 temporarily check posts for erode election in erode
வரும் பிப்ரவரி 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 7-ந் தேதி வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
அதன் படி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ குழு அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாநகர் பகுதிக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி மிக முக்கிய பகுதியாக உள்ளது. இந்த வழியாக தான் சேலம், நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், சங்ககிரி, குமாரபாளையம், திருச்செங்கோடு, சென்னை போன்ற பகுதிகளுக்கு போலீசார், தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடைபெற இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் போலீசார் பி.பி.அக்ரஹாரம் பகுதி, சம்பத் நகர், எல்லை மாரியம்மன் கோவில், மூல பட்டறை நால்ரோடு, கொல்லம்பாளையம், வீரப்பம்பாளையம், சூளை, கருங்கல்பாளையம் காந்தி சிலை உள்பட 12 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு துணை ராணுவ படையினர், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
12 temporarily check posts for erode election in erode