#BREAKING : 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தாமதம்.. மாணவர்கள் காத்திருப்பு.!
12th public exam results delay
தமிழகத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆரம்பமானது. கடந்த ஏப்ரல் 3-ம் தேதி நிறைவடைந்த இந்தத் தேர்வை 4,33,000 மாணவிகளும், 4 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்களும், 23 ஆயிரத்து 747 தனித்தேர்வுகளும் எழுதினர்.
மொத்தம் 8.50 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்தப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இந்த முடிவுகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில் அறியலாம் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியாகும் என அறிவித்த நிலையில், தற்போது வரை பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வு முடிவுவை மாணவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
English Summary
12th public exam results delay