அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட மேலும், 13 பேருக்கு உடல்நலக்குறைவு..41 பேர் மருத்துவமனையில் அனுமதி.!
13 people fell ill after eating biryani in Aranthangi
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரை வேல். இவர் தனக்கு சொந்தமான வீட்டில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் மேல்தளம் அமைப்பதற்காக கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வேலை செய்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர் அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் இருந்து 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட கட்டிட தொழிலாளர்கள் 27 பேரும் வாந்தி மயக்கம் எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த கட்டிட உரிமையாளர் சித்திரை வேல் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று 27 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில் மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பிரியாணி சாப்பிட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.
சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கெட்டுப்போன பிரியாணியா என்பது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
13 people fell ill after eating biryani in Aranthangi