மியான்மரில் சிக்கிய 13 தமிழர்கள் பத்திரமாக தமிழகம் வந்தடைந்தனர்.! - Seithipunal
Seithipunal


மியான்மரில் சிக்கிய 13 தமிழர்கள் இன்று தமிழகம் வந்தடைந்தனர்.

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் சிலர் மியான்மர் நாட்டிற்கு கடத்திச் செல்லப்பட்டனர். தகவல் தொழில்நுட்ப பணிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்.

இதனையடுத்து எடுக்கப்பட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு மியான்மரில் சிக்கித் தவித்த தமிழர்கள் 13 பேர் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டு நேற்று இரவு டெல்லி வந்தடைந்தனர். அதன்பின், டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை தமிழகம் வந்தடைந்தனர். அவர்களை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 Tamils ​​trapped in Myanmar arrived in Tamil Nadu safely today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->