காய்ச்சலுக்கு ஊசி போட்ட 13 வயது சிறுவன் உயிரிழப்பு.. போலி மருத்துவர் கைது.! - Seithipunal
Seithipunal


வாணியம்பாடியில் காய்ச்சல் ஊசி போட்டதில் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது கோடை காலம் முடிந்து மழை காலம் ஆரம்பம் ஆகிவிட்டது. ஓரிரு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் சளி காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுக்கு ஆளாகின்றனர்.

குறிப்பாக கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் வட மாவட்டங்களிலும் பலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 13 வயது சூரிய பிரகாஷ் என்ற சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அருகில் கோபிநாத் என்ற நபர் லேப் டெக்னிஷியன் படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரிடம் சென்று 13 வயது சிறுவனுக்கு ஊசி போட்டதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது போலி மருத்துவரான கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 years old boy death fake doctor arrested in vaaniyambaadi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->