#BREAKING : தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு 144 தடை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சியில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழாவில் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக 5 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும் திருவிழாவில் கலந்து கொள்ள வருபவர்கள் கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமணம் மற்றும் இறுதி சடங்கு போன்ற ஊர்வலங்களுக்கு 144 தடை உத்தரவு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மற்ற கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற இருந்தால் மாவட்ட காவல் ஆய்வாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 rule in tuticorin 2 days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->