மலைக்கோட்டை உச்சிபிள்ளையாருக்கு 150 கிலோவில் ராட்சத கொழுக்கட்டை.!
150 kg kozhukttai making in trichy uchipillaiyar temple
திருச்சி மலைக்கோட்டையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலையின் நடுப்பகுதியில் தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மையும் எழுந்தருளியுள்ள இந்தக் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த வருடத்திற்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை காலை 5 மணிக்கு கஜ பூஜையுடன் தொடங்கி 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் தாயுமான சுவாமி கோவில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட 150 கிலோவிலான ராட்சத கொழுக்கட்டையை தொட்டிலில் கட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு தலா 75 கிலோவில் படையலிட்டு நைவேத்தியம் செய்யப்பட உள்ளது.
இந்த மிகப்பிரமாண்டமான கொழுக்கட்டை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கொழுக்கட்டையை 24 மணி நேரம் ஆவியில் வேக வைத்து, தேங்காய், பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
English Summary
150 kg kozhukttai making in trichy uchipillaiyar temple