1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்! - Seithipunal
Seithipunal


1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி டெல்லியில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட போது  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்துக்கு வடமாநிலங்களில் இருந்து தரமற்ற இறைச்சிகள் மலிவான விலையில் கொள்முதல் செய்து கொண்டு வரப்பட்டு, விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து , உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய ஆவணங்கள், பாதுகாப்பின்றி ரயில்கள் மூலம் கொண்டு வரப்படும் தரமற்ற இறைச்சிகளை அவ்வப்போது சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து கடந்த ஆக.20-ம் தேதி கொண்டுவரப்பட்ட 1,700 கிலோ தரமற்ற ஆட்டு  இறைச்சியை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில்  பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், கடந்த செப்.7-ம் தேதி சனிக்கிழமை அன்று சென்னைக்கு டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டுவரப்பட்ட தரமற்ற ஆட்டிறைச்சி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பார்சல் சர்வீஸ் செய்யும் இடத்தில வைக்கப்பட்டிருந்தன.

ரயில்வே நிர்வாகிகள் இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் அறிவித்தனர். இந்த தகவலின்  அடிப்படையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் நேற்று அவற்றை சோதனை செய்தனர். பெயர் மற்றும் முகவரி போன்றவை குறிப்பிடாமல் இருந்தது. பின்னர், 28 தெர்மோகோல் பெட்டிகளில் 1,556 கிலோ ஆட்டிறைச்சி, ஆட்டுக்கால்கள், காளான்கள், ஷீப்கபாப் போன்றவை கெட்டுப்போய் அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து , அதன் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பறிமுதல் செய்த ஆட்டு இறைச்சி கெட்டுப்போனதை உறுதிசெய்து, அவற்றை கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு முறையாக அழிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த கெட்டுப்போன ஆட்டு இறைச்சி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது எனவும், அதன் உரிமையாளர் யார் எனவும் , எந்தெந்த உணவகங்களுக்கு இவை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தன என்பவை குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1556 kg of spoiled mutton confiscated


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->