ஒரே நாளில் 179 வழக்குகள் - திருவாரூரில் தீவிரமடையும் கஞ்சா, குட்கா விற்பனை.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கஞ்சா, குட்கா, சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது;-

"திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பாக தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சோதனையில் நேற்று மட்டும் 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன் படி 9 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அதில் ஒருவர் கஞ்சா விற்பனையாளர்.

கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமாக விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

179 case file at one day in tiruvarur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->