வேலூர் || சிறைக் கைதிக்கு கஞ்சா கொடுத்த 2 பேர் கைது..!!
2 peoples arrested for kanja provide to prison in vellore
வேலூர் மாவட்டம் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு. வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் இருந்து வரும் இவரைப் பார்க்க அவர்களுடைய நண்பர்களான வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த மோகன், பாகாயத்தை சேர்ந்த ஹரிஷ் ஆகியோர் நேற்று முன்தினம் பிற்பகல் சிறைக்கு சென்றுள்ளனர்.
அங்கு விஷ்ணுவுடன் பேசிக்கொண்டிருந்த இருவரும் திடீரென நூதன முறையில் வாயில் பதுக்கி வைத்திருந்த ஒரு கிராம் அளவுக்கு சிறிய கஞ்சா பொட்டலத்தை இரும்பு கம்பிகளுக்கு மறுபக்கம் இருந்த விஷ்ணுவிடம் துப்பியுள்ளனர்.
அதனை விஷ்ணு எடுத்து மறைக்க முயன்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் கவனித்துள்ளார். இதையடுத்து விஷ்ணு அந்த கஞ்சா பொட்டலத்தை தூக்கி எறிய முயன்றுள்ளார். உடனே சிறைக்காவலர்கள் விஷ்ணுவை கையும் களவுமாக பிடித்ததைத் தொடர்ந்து, ஹரிஷ் மற்றும் மோகன் ஆகியோரை பாகாயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார், வழக்குப்பதிவு செய்து ஹரிஷ், மோகன் ஆகிய இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
2 peoples arrested for kanja provide to prison in vellore