கஞ்சா கலந்த சாக்லேட்டை விற்பனை செய்த இருவர் கைது..! - Seithipunal
Seithipunal


கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம்,  பணிக்கம் பாளையத்தில் உள்ள இளைஞர்களிடம் போதை பழக்கத்திற்கு அடிமையாகி பலர் தகராறிலும் சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனையில் ஈடுப்பட்டனர். அங்குள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது அந்த பகுதியில் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த இருவர் கஞ்சா கலந்த சாக்லேட்டை விற்பனை செய்ததை கண்டறிந்தனர். அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குபதிவு செய்த காவல்துறயினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 persons arrested in Erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->