இரண்டாண்டு பி.எட் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி மூலம் வழங்கப்படும் 2 ஆண்டு பி.எட் படிப்புக்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

இது குறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி நிறுவனத்தில் 2 ஆண்டு பி.எட் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

இதனையடுத்து 2023-2024 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையில் பி.எட் படிப்புக்கு 500 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

எனவே விருப்பம் உள்ள பட்டதாரிகள் இன்று முதல் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள 80157 58308 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 years B.ed course application from today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->