2000 ரூபாய் நோட்டு வாங்கப்படாது.. பைக்கில் இருந்து பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர்.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

அந்த வகையில் தினமும் 20,000 ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றலாம். வங்கிகளில் செலுத்தப்படும் ரூ.2000 நோட்டுக்களை வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.

மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கி கணக்கில் செலுத்துவதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்று வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

இதனிடையே பெட்ரோல் பங்குகளில்  ரூ.2000 நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்திற்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். அதன் பின்னர் 2000 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். ஆனால் அந்த 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் வேறு நோட்டு தருமாறு கூறியுள்ளார்.

இதற்கு அந்த பெண் வேறு நோட்டு இல்லை என்று கூறியுள்ளார். அதன் பிறகு வாகனத்தில் இருந்து பெட்ரோல் பங்க் ஊழியர் டியூப் வழியாக பெட்ரோலை மீண்டும் உறிஞ்சி எடுத்துள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2000 rupees note not buy and return petrol in perambur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->