வரும் ஆண்டு தமிழக பள்ளிகளுக்கு 3 செமஸ்டர் தேர்வு! தேர்வு நாள், விடுமுறை நாள் - அதிகாரபூர்வ அறிவிப்பு!
2023 2024 TN School Exam date leave date announce
வரும் 2023-24 கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்கள் 216 ஆகவும், வேலை நாட்கள் 150 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 - 2024 பள்ளி கல்வி ஆண்டுக்கான மூன்று பருவ தேர்வுகள் நடக்கும் தேதிகள் மற்றும் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
முதல் பருவ தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும்
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்.
இரண்டாம் பருவ தேர்வு டிசம்பர் 11 முதல் டிசம்பர் 22 வரை நடைபெறும்.
டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்.
மூன்றாம் பருவ தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தொடர்ந்து அடுத்த ஆண்டு பள்ளியின் கடைசி வலை நாளாக ஏப்ரல் 30 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2023-24 கல்வி ஆண்டில் மே ஒன்றாம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை 31 நாட்கள் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
English Summary
2023 2024 TN School Exam date leave date announce