#BREAKING:: செங்கல்பட்டில் அதிர்ச்சி... ரயிலுக்காக காத்திருந்த 21 வயது பெண் கூட்டு பலாத்காரம்..!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு அருகே 21 வயது இளம்பெண் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சைதாப்பேட்டையில் தங்கி டெலிகாலராக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று செங்கல்பட்டியில் உள்ள தனது தோழிகளை பார்த்துவிட்டு சைதாப்பேட்டை செல்வதற்காக செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இரவு 10:30 மணி அளவில் காத்துக் கொண்டிருந்த பொழுது காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்தப் பெண்ணை காரில் கடத்தி பாலவாக்கம் பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பிய இளம் பெண் அருகில் உள்ள வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன் பெயரில் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடுவதற்காக தனி படை அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளம் பெண் கண்விழித்ததும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21year old woman gang raped in chengalpattu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->