துணியில் சுற்றிய நிலையில் தாம்பரத்தில் 23 வயது இளைஞனின் சடலம்; சென்னையை அதிர வைக்கும் மற்றுமொரு சம்பவம்..! - Seithipunal
Seithipunal


சென்னை தாம்பரம் பகுதியில் மாற்றுதிறனாளி நபர் ஒருவர் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலையுண்டு கிடந்துள்ளார்.

தாம்பரம், சேலையூர் அடுத்த மப்பேடு புதூர் பகுதியில் சாலையோர காலி இடத்தில் குறித்த மாற்றுதிறனாளி நபரின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

போலீசார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் 18 வயது குறைந்த பெண்ணை காதலித்து வந்த அந்த வாலிபர், 3 மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தவர் என்பது தெரியவந்தது.

சென்னை தாம்பரத்தின் சேலையூரை அடுத்து உள்ள பகுதி மப்பேடு, இங்குள்ள புதூர் பகுதியில் சாலையோர காலி இடத்தில் ஒரு இளைஞர் உடல் கொல்லப்பட்ட நிலையில், கிடப்பதாக சேலையூர் போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. 

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு, இளைஞர் ஒருவர், கழுத்து அறுக்கப்பட்டு மோசமான முறையில் கொல்லப்பட்டிந்தார்.

அவரது உடல், ஒரு துணியால் சுற்றப்பட்டிருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது, அவர் மாற்றுத்திறனாளி வாலிபர் என்பதும் கழுத்து அறுக்கப்பட்டு, வெட்டுக்காயத்துடன் கை, கால்கள் துணியால் கட்டப்பட்டு இருந்ததும் தெரிவந்துள்ளது.

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சேலையூர் போலீசார் அனுப்பி வைத்து, விசாரணையை உடனடியாக தொதொடங்கியுள்ளனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சேலையூர் அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்த 23 வயதாகும் சூர்யா (23) என்பது தெரியவந்துள்ளது.

இவரது தந்தை இறந்து விட்டதாகவும், தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தார் தெரியவந்துள்ளது. குறித்த இளைஞர் சூர்யா நேற்றிரவு குடிபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

வீட்டில் சிறிது நேரம் இருந்து விட்டு வெளியே சென்று வருவதாக தாயிடம் கூறி சென்ற சூர்யா அதன்பிறகு திரும்பவரவே இல்லை. என்று கூறப்படுகிறது.

அத்துடன் இளைஞரை கொலை செய்து வாகனத்தில் கொண்டு வந்து வீசி விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

சிட்லபாக்கத்தை சேர்ந்த ஒரு சிறுமியை சூர்யா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துளார். சிறுமிக்கு18 வயது ஆகாததால் அவரை, பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தது விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. 

இந்த காதல் விவகாரம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் தகவலறிந்து பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தியுள்ளார்.

அத்துடன், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் தாம்பரம் சேலையூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

23 year old man found wrapped in cloth in Tambaram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->