சர்ச்சை! பாஜக பெண் நிர்வாகிகளை ஆடுகளுடன் அடைத்துவைத்த காவல்துறை! - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்தும், குற்றவாளி தி.மு.க.வுடன் தொடர்புடையவர் என்பதால் உண்மை வெளிவராமல் தி.மு.க. அரசு முயற்சி செய்வதை கண்டித்தும், பா.ஜ.க. மகளிரணி சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

முன்னதாக செல்லத்தம்மன் கோவிலில் மகளிரணி தலைவி ஓம்சக்தி தனலட்சுமி தலைமையில் 7 பெண்கள் கையில் தீச்சட்டி ஏந்தி கோவில் வளாகத்தை சுற்றினர்.

பின்னர், கண்ணகி நீதி கோரிய போராட்டத்தை நினைவூட்டும் விதமாக மிளகாய் வற்றல் அரைத்தும், கையில் சிலம்பு ஏந்தியும் மகளிரணி நிர்வாகிகள் வந்தனர். 

டிராக்டரில் தொடங்கிய பேரணிக்கு மாநில மகளிரணி தலைவர் உமாரதி ராஜன் தலைமை தாங்க, பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேரணியை தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் இருந்து மகளிரணி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர், அவர்கள் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை ஆடுகள் நிறைந்த திருமண மண்டபத்தில் அடைத்ததால், துர்நாற்றம் மற்றும் ஆடுகளின் சத்தம் பெரும் அவதியினை ஏற்படுத்தியதாக பா.ஜ.க. மகளிரணியினர் புகார் தெரிவித்தனர், 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Protest Madurai Some worst incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->