கிருஷ்ணகிரி : சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 24 வயது இளைஞர் பலி.! - Seithipunal
Seithipunal


சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவரின் மகன் அருண்குமார் வயது 24. இவர் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் அருண்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பிரியாணி சாப்பிட்டதால் தான் உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24-year-old youth dies after eating chicken biryani.


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->