தமிழகத்தை மிரட்டும் கொரோனா.. "கோவையில் ஒருவர் உயிரிழப்பு".. 242 பேருக்கு தொற்று உறுதி..!! - Seithipunal
Seithipunal


கடந்த நான்கு மாதங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த நிலையில் சமீப நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. இன்று தமிழகத்தில் புதிதாக 242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,216 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 112 ஆக உள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 பேருக்கும், திருவள்ளூரில் 13 பேருக்கும், கோவையில் 12 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த 55 வயது தக்க பெண் கடந்த மாதம் 17ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

நுரையீரல் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் இருந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா சோதனையின் பொழுது தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் கோவை மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

242 people infected with corona one person has died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->