தஞ்சாவூர்: 16 வயது சிறுமி கர்ப்பம்.! வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை கர்ப்பமாகிய வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் சில்லத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(27). இவர் இதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் ஒரத்தநாடு அருகே உள்ள பகுதியை சேர்ந்த பால்ராஜ்(32) என்பவர் சிறுமியின் அண்ணனை பார்க்க வந்துள்ளார். அப்பொழுது சிறுமியின் காதல் விவகாரம் பால்ராஜ்க்கு தெரிய வந்தது. ஆனால் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பால்ராஜ் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து சிறுமி கர்ப்பமானதால், காதலனிடம் கூறி உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஆனந்தராஜ் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் சிறுமி இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு ஆனந்தராஜ் மற்றும் பால்ராஜை கைது செய்தனர். மேலும் குழந்தைக்கு தந்தை யார் என்பதைக் கண்டறிய டிஎன்ஏ சோதனை மேற்கொண்டதில், குழந்தைக்கு தந்தை பால்ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை கர்ப்பம் ஆக்கிய பால்ராஜ் க்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் சிறுமியை காதலித்து பாலியல் தொந்தரவு கொடுத்த ஆனந்தராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 years in prison for the young man who made a 16 year old girl pregnant in Thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->