நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை பிடிக்கல; கூலிப்படையை கொண்டு கொலை செய்ய முடிவு செய்த பெண்..!
A woman decided to use mercenaries to settle the matter because her betrothed groom was not interested
புனேயில் நிச்சயம் செய்த பிறகு மாப்பி்ள்ளை பிடிக்காத காரணத்தினால், பெண் ஒருவர் ஐந்து பேருக்கு 1.5 லட்சம் கொடுத்து கொலை செய்ய செய்துள்ளார்.
மஹாராஷ்டிரா புனே மாவட்டம் கர்ஜாட் தாலுகா மகி ஜல்கான் பகுதியைச் சேர்ந்தவர் சாகர் ஜெய்சிங் கடாம். இவர் ஓட்டலில் சமையல் வேலை செய்து வருகிறார். இவருக்கும் 28 வயதான மயூரி சுனில் டாங்டே என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பிறகு மயூரிக்கு ஜெய்சிங் கடாமை பிடிக்கவில்லை. இதனால் ஜெய்சிங் கடாமை தீர்த்துக் கட்ட முடிவு செய்து, இதற்கான ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஐந்து பேர் கொண்ட கூலிப்படையை உருவாகியுள்ளார். குறித்த ஐந்து பேரும் ஜெய்சிங் கடாமை கொலை செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி புனே-சோலாபூர நெடுஞ்சாலை டவுண்ட் அருகே ஜெய்சிங் கடாம் சென்றபோது, மர்ம மனிதர்கள் அவரை தாக்கியுள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்து தப்பித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆதித்யா சங்கர், சந்தீப் கவடா, சிவாஜி ராம்தாஸ் ஜாரே, சுராஜ் திகாம்பர் ஜாதவ், இந்திரபன் சகாராம் கோல்பே ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில், மயூரிதான் கொலை செய்ய சொன்ன அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
உடனோ போலீசார் மயூரை கைது செய்ய சென்றபோது, அவர் தலைமறைவாகியுள்ளார். தற்போது போலீசார் அவரை தேடிவருகின்றனர்.
English Summary
A woman decided to use mercenaries to settle the matter because her betrothed groom was not interested