மண்டபம் அருகே 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம் பகுதியில் இருந்து கடல் வழியாக தங்கம், கஞ்சா, புகையிலை, பீடி இலைகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாமல், தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களாகன கடல் குதிரை, திமிங்கல எச்சம் உள்ளிட்டவையும் கடத்தப்படுகிறது. இந்த நிலையில், மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கடல் அட்டைகள் கொண்டு வருவதாக மண்டபம் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் படி, போலீசார் வேதாளை பேருந்து நிறுத்தம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 5 மூடைகளில் 250 கிலோ கடல் அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

உடனே போலீசார் வாகனத்தை ஒட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் இருவரும் மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த சுல்தான் மகன் சாகுல் ஹமீது என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

250 kilo sea cards seized in mandabam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->