போலி நில ஆவணங்கள்! ரூ.29 லட்சம் மோசடி! அதிரவைக்கும் பின்னணியில் சிக்கிய முக்கிய புள்ளி! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை அருகே போலி ஆவணங்களை வைத்து ரூ.29 லட்சம் நிலம் மோசடி செய்த உடந்தையாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சாரங்காபாணி முதலியார் தெருவை சேர்ந்தவர் சம்பத். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு நிலத்தரகர் கார்த்திக் என்பவர் அறிமுகமான நிலையில், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகே வரதராஜபுரம் பகுதியில் 1,980 சதுரஅடி கொண்ட மனையை விற்பனைக்காக கார்த்திக் சம்பத்திடம் காட்டியுள்ளார்.

இந்த இடம் சந்திரன் என்பவருக்கு சொந்தமானது என்றும் ராமகிருஷ்ணன் என்பவருக்கு அந்த இடத்தை சந்திரன் பொதுஅதிகாரம் வழங்கியுள்ளார் எனவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரூ.29 லட்சம் கொடுத்து கார்த்திக் மற்றும் சந்திரன் ஆகியோரிடம்  சம்பத் இடத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்த போது போலிய ஆவணங்கள் மூலம் சம்பத்திற்கு இடத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் சம்பத் புகார் அளித்தார்.

அதன் பேரில் ஆவடி மத்திய கூட்டுறவு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இதற்கு உடந்தையாக இருந்த கொரட்டூர் டிவிஎஸ் வள்ளலார் நகர் தெருவை சேர்ந்த சரத்பாபு என்பவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

29 lakhs land fraud using fake documents


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->