3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை 3 நாட்கள் தொடர்ந்து மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

ராமநாதபுரம், பசும்பொன்னில் வருகின்ற 30ஆம் தேதி அரசு விழாவாக முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா குருபூஜை நடைபெற உள்ளது. 

இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சமுதாய தலைவர்கள், சமுதாய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். 

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 28, 29, 30 ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட ஆட்சியர், பொது அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 days Tasmac shops closed District Collector order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->