ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்.! கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கேளிக்கை விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக 3 பேர் உள்ளே இறங்கியுள்ளார். அப்போது விஷவாயு தாக்கியதில் 3 பேரும் கழிவுநீர் தொட்டியில் மயங்கி விழுந்துள்ளனர். இவர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்குவதற்காக உடைகளை வெளியே வைத்து உள்ளார். 

இதைப் பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதியினர் கழிவுநீர் தோட்டிக்குள் எட்டிப்பார்த்தபோது 3 பேர் மயங்கி உள்ளே கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போலீசார் உதவியுடன் கழிவுநீர் தோட்டியில் மயங்கி கிடந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 killed by poison gas while cleaning the drainage water tank in Sriperumbudur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->