ரூ.3 லட்சம்., போதை ஆசாமியிடமிருந்து மீட்ட மூதாட்டி.! குவியும் பாராட்டு மழை.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் தம்பிபட்டியைச் சேர்ந்த மூதாட்டி கவிதா. இவர் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வருகிறார். 

இவர் நேற்று முன்தினம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நின்ற போது, மஞ்சள் பையுடன் போதை தலைக்கேறி நிலையில் ஒருவர் கீழே விழுந்து கிடந்தார். சிலர் அவரிடம் இருந்த மஞ்சள் பையை பறிமுதல் செய்ய முயற்சித்தனர்.

இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த மூதாட்டி கவிதா, துரிதமாக செயல்பட்டு அந்த மது போதை ஆமியிடம் இருந்த மஞ்சள் பையை எடுத்து நேரடியாக திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் மஞ்சப்பை திறந்து பார்த்தபோது அதில் மூன்று லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. இதனை அடுத்து மது போதையில் இருந்து ஆசாமி இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் பேசும் அளவிற்கு சுயநினைவு இல்லாததால், அவரின் மனைவியை வரவழித்து இந்த பணம் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவரின் மனைவி துர்கா, "நாங்கள் தஞ்சை மாவட்டம் திருப்பூரணிகாடு பகுதியில் வசித்து வருகிறோம். எனது கணவர் கடந்த மூன்றாம் தேதி சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு வந்தார். அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து சம்பள பாக்கியாக மூன்று லட்சத்தை வாங்கி வருவதாக சொல்லிவிட்டு சென்றார். அந்த பணம்தான் இது" என்று துர்கா தெரிவிக்கவே, போலீசார் பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் துரிதமாக செயல்பட்டு மூன்று லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை போகாமல், போலீசாரிடம் ஒப்படைத்த மூதாட்டி கவிதாவுக்கு போலீசார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 lakh on the floor recovered Accumulating praise


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->