காலையிலே அதிர்ச்சி! அமீபா நுண்ணூயிர் பரவலால் 3 பேர் பலி! அரசு முன்னெச்சரிக்கையுடன் செல்லப்பட வேண்டும் -இ.பி.எஸ்! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணூயிர் பரவலால் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக அரசு முன் எச்சரிக்கைவுடன் செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிரி பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிரி பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.

உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கேரளா மாநிலத்தில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் இத்தகு பரவல் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர் குழந்தைகளை தொற்றும் ஆபத்து அதிகமாக உள்ளதால் மக்களின் உயிர்களைக்காக்க நடவடிக்கையில் அதிக கவனத்தை செலுத்துமாறு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 people died due to the spread of amoeba bacteria Govt should proceed with caution EPS


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->