தூத்துக்குடியில் ஒரே நேரத்தில் 3 பள்ளி மாணவிகள் மாயம்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் ஒரே நேரத்தில் மூன்று மாணவிகள் காணாமல் போய் உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முத்தையாபுரத்தை சேர்ந்த 3 மாணவிகள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இவர்கள் நேற்று பள்ளிக்கு சென்ற நிலையில் நாளை பள்ளி முடிந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி வர என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தூத்துக்குடி மத்திய பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுமிகள் 3 பேரும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கி பள்ளிக்கு செல்லாதது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் காணாமல் போன மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் காணாமல் போன மூன்று பள்ளி மாணவிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 schoolgirls disappeared at the same time in Tuticorin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->