வயல்வெளிக்கு தூக்கிச் சென்று சிறுமி பலாத்காரம் - 3 தெருக்கூத்து கலைஞர்கள் கைது - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் சிறுமியை வயல்வெளிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்த மூன்று தெருக்கூத்து கலைஞர்களை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி பகுதியில் மழை வேண்டி கடந்த 25 ஆம் தேதி இரவு அர்ஜுனன் தபசு தெருக்கூத்து நடந்தது. இந்நிலையில் தெருக்கூத்து கலைஞர்களான சொக்கனேரியை சேர்ந்த கொல்லாபுரி(65), பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (48), மஞ்சுநாதன் (33) ஆகிய மூன்று பேரும் அதே பகுதியை சேர்ந்த வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த 14 வயது சிறுமியை வாயை பொத்தி அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை மிரட்டி உள்ளனர். இதைத்தொடர்ந்து சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் உறவினர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்பொழுது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட தர்மபுரி அனைத்து மகளிர் காவல்துறையினர், தெருக்கூத்து கலைஞர்களான கொல்லாபுரி, மணிகண்டன், மஞ்சுநாதன் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 street artists arrested for raping a girl by carrying them to the field in dharmapuri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->