#BREAKING : தீவிரமடையும் மாண்டஸ் புயல்.. மேலும் 5 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
30 districts holiday due to mandus storm
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவு 'மாண்டஸ்' புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த மாண்டஸ் புயல் தற்போது மணிக்கு மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தீவிர புயலானது இன்று காலை (வெள்ளிக்கிழமை) 9 மணியளவில் புயலாக வலுவிழக்கும். மேலும், இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 11.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டா மற்றும் புதுச்சேரி இடையே, மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்காரணமாக வடதமிழகம், புதுச்சேரி, தென் ஆந்திர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 75 முதல் 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, திருச்சி, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி ஆகிய 26 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
தேனி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்
அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
30 districts holiday due to mandus storm