ஒரு நாளைக்கு 30 பேர் டெங்குவால் பாதிப்பு..!! பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்.!!
30 people affected by dengue per day in tn
தமிழ்நாட்டில் கடந்த 17 நாட்கள் பொருத்தவரை 922 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் மழைக்காலங்களிலும் குளிர்காலங்களிலும் தீவிரமாக பெருக்கும் அடைகின்றது.
கடந்த ஆண்டு 9,121 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் 10 பேர் உயிரிழந்தனர். கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் அந்த காலகட்டத்தில் மட்டும் 4500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து 922 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பருவ மழை முடிவடைந்துள்ளதால் அடுத்த மூன்று வாரங்களுக்குள் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதிகளவு மழைப்பொழிவு கண்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கொசு வாயிலாக பரவும் நோய் தடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நாள் ஒன்றுக்கு 80 பேர் வரை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அது 30 ஆக குறைந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
English Summary
30 people affected by dengue per day in tn