இராஜீவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 30ஆம் ஆண்டு விழா..சபாநாயகர் செல்வம் பங்கேற்பு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி இராஜீவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 30ஆம் ஆண்டு விழாவில்   சபாநாயகர் செல்வம் பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டியதோடு சிறப்புரையாற்றினார்.

புதுச்சேரி தவளக்குப்பம் ராஜீவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 30 ஆம் ஆண்டு விழா கல்லூரியின் வளாகத்தில்  காலை 10.00 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.கல்லூரியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் சபாநாயகரும் மணவெளி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஏம்பலம் செல்வம் அவர்கள் தலைமையுரையாற்றி  ஆண்டு விழா கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டியதோடு சிறப்புரையாற்றினார்.

. கல்லூரியின் 30 ஆவது ஆண்டு விழா ஆண்டறிக்கையினைக் கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் ஹென்னா மோனிஷா வாசித்திட, கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர்.இராதாக்கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு கல்வியாண்டில் சிறப்பாக பயின்ற இளங்கலை பட்டய மாணவ மாணவியர்களைப் பாராட்டியதோடு நல்வழிக்காட்டிட்ட துறைத் தலைவர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். 

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியினை கணினி செயல்பாட்டியல் துறைத் தலைவர் முனைவர்.N. ஞானாம்பிகை அவர்கள் வழங்கிட,  கணினி செயல்பாட்டில் துறை உதவிப் பேராசிரியை திருமதி.P.ரேவதி தொகுத்து வழங்கினார்.

 தவளக்குப்பம் இராஜீவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியிகளை ஆண்டு விழாக் குழு பேராசிரியர்கள் மிகச் சிறப்பாக முன்னின்று செய்திட்ட நிகழ்ச்சியில் கல்லூரியில் பயிலும் மூன்றாண்டு மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரியில் பணியாற்றும் துறைத் தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர்ப் பொது மக்கள் என திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் ஆங்கிலத் துறைத் தலைவர் திருமதி.P. அருளரசி அவர்கள் ஆண்டு விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

30th Anniversary of Rajiv Gandhi College of Arts and Science Speaker Selvam participates


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->