யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு.! நாடு முழுவதும் 933 பேர் தேர்ச்சி.. தமிழ்நாட்டில் எத்தனை பேர்..? - Seithipunal
Seithipunal


ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களையும் நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் போட்டி தேர்வு நடத்தி வருகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று வெளியான தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 4 இடங்களையும் பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடமும், கரிமா லோகியா இரண்டாம் இடமும், உமா ஹராதி மூன்றாமிடமும், ஸ்மிருதி மிஷ்ரா நான்காம் இடமும் பிடித்துள்ளனர். யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்றவர்களில் 345 பேர் பொது பிரிவைச் சேர்ந்தவர்களும், 99 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்களும், 263 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களும், 154 பேர் எஸ்சி பிரிவை சேர்ந்தவர்களும், 72 பேர் எஸ்டி பிரிவையும் சேர்ந்தவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி 107ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். எலக்ட்ரீசியனின் மகனான மகளான இவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து கோவில்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாமி 117ஆவது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அதேபோல சென்னையைச் சேர்ந்த மதிவதனி ராவணன் என்பவர் 447ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

குடியரசு என்பவர் 849ஆவது இடத்தை பிடித்துள்ளார். அருண் என்பவர் 436ஆம் இடத்தையும் , கார்த்திக் என்பவர் 488ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். எழிலரசன் என்பவர் 523ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஏற்கெனவே குடிமைப் பணியில் இருக்கும் குடியரசு என்பவர் 849ஆவது இடத்தை ராகுல் என்பவர் 858ஆவது இடத்தை பிடித்துள்ளனர். ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் இருந்து 39 பேர் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

39 people passed in upsc exam in TamilNadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->