க்ரில் சிக்கன் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி.!
4 peoples food poison ate grill chicken in chengalpattu
செங்கல்பட்டு அருகே உள்ள உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட 4 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக சாப்பிடும் உணவு நஞ்சாகி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதற்கு காரணம் பழைய உணவுப்பொருட்களை பயன்படுத்துதல், உணவின் நிறம் மற்றும் சுவைக்காக தேவையற்ற ரசாயனங்களை பயன்படுத்துவது தான் என கூறப்படுகிறது.
இது போன்ற தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்களை கண்டுபிடித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் குறிப்பிட்ட உணவகங்களுக்கு சீல் வைத்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சில உணவகங்கள் இது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் கிரில் சிக்கன் சிக்கன் நூடுல்ஸ் சாப்பிட்ட 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக அவர்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
English Summary
4 peoples food poison ate grill chicken in chengalpattu