சிவகங்கை || கோவில் திருவிழாவில் பரிதாபம் - விஷ வண்டு தாக்கி 40 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதிலும் சில கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள் பிரபலமாக இருக்கும். இந்தத் திருவிழாக்களில் கலந்து கொள்வதற்காக அருகிலுள்ள சில கிராம மக்களும் வருகைத் தந்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.

அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுந்தர நடப்பு கிராமத்தில் கண்மாய் கரையில் அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டும் ஆடித் திருவிழா நடைபெற்றது. 

இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த அக்னிச்சட்டி எடுத்துச் சென்றனர். இந்த நிலையில், பக்தர்கள் கோவிலை நோக்கி கண்மாய் கரையில் சென்றபோது கோவில் அருகே ஆலமரத்தில் இருந்த விஷ வண்டுகள் பக்தர்களை விரட்டி விரட்டிக் கடித்தன.

இந்தத் தாக்குதலில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் திருவிழாவில் விஷ கண்டு கடித்து 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் appakuthiyil பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

40 devotees injured poisones insects attack in sivakangai temple function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->