#சென்னை || கூவம் ஆற்றில் செத்து மிதக்கும் 4000 கிலோ மீன்கள்.!! பொது மக்களுக்கு பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


சென்னை திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் செல்லும் கூவம் ஆற்றில் சுமார் 4000 கிலோ மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூவம் பகுதியிலிருந்து தொடங்கும் இந்த நதியானது திருவேற்காடு, மதுரவாயல், அடையாறு வழியாக வங்க கடலில் கலக்கிறது.

இந்நிலையில் திருவேற்காடு அருகே காடுவெட்டி பகுதி வரை கழிவு நீர் கலக்காமல் வரும் கூவம் நதியில் சென்னீர்குப்பம் பகுதியில் கழிவு நீர் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அந்த பகுதியில் தினமும் இளைஞர்கள் குளிப்பது, தெர்மாகோல் படகு மூலம் மீன் பிடிப்பது போன்ற செயல்கள் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை திடீரென அப்பகுதியில் மீன்கள் செத்து மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் திருவேற்காடு நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருவேற்காடு நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ஆல்பர்ட் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை அடுத்து திருவேற்காடு நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் கூவம் நதியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் நீரின் அளவு குறைந்ததன் காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம் என திருவேற்காடு நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அப்பகுதி மக்களோ இரவு நேரத்தில் பெரிய வாகனங்களில் வந்து குப்பைகளை கொட்டுவது, கழிவுநீர்களை திறந்து விடுவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுவதால் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவு நீர் திறந்துவிட்டு இருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளனர். கூவம் நதியில் இருந்து அகற்றப்பட்ட மீன்களின் மாதிரிகளை ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4000kg fishes floating dead in Koovam river in Chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->