#Breaking :: முன்னாள் திமுக எம்பி மஸ்தான் மரணத்தில் திடீர் திருப்பம்..!! 4 பேர் கைது செய்து காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


திமுகவின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளரும் திமுகவின் முன்னாள் எம்.பியுமான டாக்டர் மஸ்தான்  தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 22ம் தேதி சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஸ்தான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. முன்னாள் எம்பி மஸ்தானின் திடீர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர்களுடைய உறவினர்கள் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கூடுவாஞ்சேரி போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில்  திடீர் திருப்பமாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் திமுக எம்பி மஸ்தான் தனது மகனுக்கு கடந்த 23ஆம் தேதி திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் அவரின் உயிரிழந்தது பரபரப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில் முன்னாள் திமுக எம்பி மஸ்தான் மரண வழக்கில் திடீர் திருப்பமாக 4 பேர் கைது செய்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்விரோதம் அல்லது கொடுத்தல் வாங்கல் பிரச்சனை காரணமாக..?  அரசியல் ரீதியில் வேறு ஏதேனும் காரணமா..? என்ற கோணத்தில்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் எம்பி மஸ்தான் மரண வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4people arrested in former DMK MP Mastan death case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->